(செ.கவிஷனா)
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் நிலைத்திருந்தால், இலங்கையின் பணவீக்கத்தை மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி வெற்றிகரமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு சவாலாக அமையக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை ஒரு கொள்கலன் சுமார் 80 அமெரிக்க டொலர் என்ற அளவில் சீராக நிலவினால், இலங்கையால் பணவீக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்தால் உள்ளூர் நாணயம் மற்றும் பணவீக்கத்துக்கு ஏற்படும் அழுத்தங்களை இலங்கை திறம்பட கையாண்டு வருகிறது. இருப்பினும், உலகச் சந்தையில் எதிர்பாராத பொருளாதார அல்லது அரசியல் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அது நிச்சயம் சவாலாக அமையும்.
கடந்த மே மாதத்தில் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே தற்போதைய பொருளாதார சீரமைப்பிற்கு பிரதான காரணங்களாகும்.
இதன் பலனாக, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை நோக்கி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் நிலவியபோதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதகமான தாக்கங்கள் ஏற்படாது என்றும், ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை மிதமான அளவில் இருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட இறையாண்மைக்கடன் நெருக்கடிக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்ச்சியான மீட்சிச் செயன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட வேலைத்திட்டம் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழுமையடையவுள்ள நிலையில், அதற்கான அடுத்தகட்ட மீளாய்வு நடவடிக்கைகள் இந்த ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM