எல் - நினோ காலநிலை தாக்கம் : விசேட அமைச்சரவை உப குழு, அதிகாரிகள் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது ; வறட்சியான மாவட்டங்களுக்கு நீர் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் 

18 Aug, 2026 | 01:36 PM
image

எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17) பிற்பகல் கூடியது.

சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய பெருந்தோட்டத்துறை, விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கும், அந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வறட்சியான காலநிலை மேலும் நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் குறைவடைதல் தொடர்பில் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல் நினோவின் புதிய நிலைமைகள் குறித்து ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எல் நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிப்புக்குள்ளாகும் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர் / அழைப்பாளர், அதிகாரிகள் குழுவின் தலைவர் / ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்ஹ, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே ஆகியோருடன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20