வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (17) திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு , வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் ஆஜர் ஆகுமாறு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்டுள்ள மன்று , அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டுள்ளது.
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அன்றைய தினம் போராட்ட வடிவத்தை மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து, கறுப்பு மேலங்கி அணிந்து , கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு சில மணி நேரம் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பலாலி சந்தி பகுதிக்கு சென்று மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தினால் , வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறியே பலாலி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM