(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் சொனால் தினூஷ அசத்தலான சதம் குவித்து இலங்கை அணியை கௌரவமான நிலையில் இட்டார்.
மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த விக்கெட்காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல அரைச் சதம் பெற்றார்.
இந்தியா பெற்ற 462 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது.
அதன் பின்னர் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸை இன்று காலை ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் 180 ஓட்டங்களை சொனால் தினூஷவும் நிரோஷன் திக்வெல்லவும் பெற்றமை விசேட அம்சமாகும்.
ஒரு கட்டத்தில் இலங்கை 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.
நிஷான் மதுஷ்க (0), தினேஷ் சந்திமால் (4), லஹிரு உதார (27), கமிந்து மெண்டிஸ் (14), அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (21) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஆனால், 25 வயதான சொனால் தினூஷ, 33 வயதான சிரேஷ்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 146 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.
தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சொனால் தினூஷ, 4 மணித்தியாலங்களுக்கு மேல் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 168 பந்துகளை எதிர்கொண்டு 100 ஓட்டங்களைப் பெற்றார். அவரது துடுப்பாட்டத்தில் 4 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் மாத்திரம் அடங்கி இருந்தன.

நிரோஷன் திக்வெல்ல 115 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகளுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
இது அவரது 23ஆவது அரைச் சதமாகும்.
எவ்வாறாயினும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கன்னிச் சதம் குவிக்க கிடைத்த வாய்ப்பை நிரோஷன் திக்வெல்ல மீண்டும் தவறவிட்டார்
முன்னதாக போட்டியின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 460 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்களை மாத்திரம் சேர்த்த நிலையில் தனது கடைசி விக்கெட்டை இழந்தது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு தினங்கள் கள மத்தியஸ்தராக கடமையாற்றிய ரொட் டக்கர் சுகவீனம் காரணமாக மூன்றாம் நாளான நேற்றைய தினம் கடமையில் ஈடுபடவில்லை. அவருக்குப் பதிலாக அஹ்சன் ராஸா கள மத்தியஸ்தராக ஷர்ஃபுதூலாவுடன் இணைந்து செயற்பட்டார்.
நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடரும்.
/
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 462 (தேவ்டத் படிக்கல் 167, கே.எல். ராகுல் 82, த்ருவ் ஜுரெல் 51, ரிஷாப் பான்ட் 39, யஷஸ்வி ஜய்ஸ்வால் 31, ப்ரபாத் ஜயசூரிய 109 - 4 விக்., கேஷர நுவன்த 175 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 63 - 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 284 (சொனல் தினூஷ 100, நிரோஷன் திக்வெல்ல 80, லஹிரு உதார 27, தனஞ்சய டி சில்வா 21, மானவ் சுதார் 76 - 4 விக்., ரவிந்த்ர ஜடேஜா 57 - 3 விக்.)




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM