சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்தது முன்னிட்டு, அவருக்கு பாராட்டும், கொண்டாட்டமும் நடைபெற்றது.
1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முதல் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் அவர் தற்போது நடித்து வரும் 'தர்மன்' படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
'தர்மன்' படத்தின் படபிடிப்பு தளத்தில் ரஜினியிஸம் ரஜினி 51 என்றதொரு பிரத்யேக நிகழ்வை படக் குழுவினர் பிரம்மாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடினர்.
இந்த தருணத்தில் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகைகள் சிம்ரன், ராசி கண்ணா ஆகியோரும் சுப்பர் ஸ்டாருடன் இருந்தனர்.
இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM