இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்' படத்தின் இசை & முன்னோட்டம்

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 04:59 PM
image

குணச்சித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷின் மகனான நடிகர் துஷ்யந்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆல் பாஸ்' திரைப்படத்தில் துஷ்யந்த் - எம்முடைய மண்ணின் மங்கை ஜனனி குணசீலன் ஆகிய இருவரும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், ஆர் . மோகனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தில் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.

வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக உரைக்கும் இந்த திரைப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகனா தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய இயக்குநர் விக்ரமன் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மண்ணின் மங்கை ஜனனி குணசீலன் பேசுகையில், '' இந்த கதையை இயக்குநர் முதன்முதலாக எம்மை சந்தித்து சொன்னதும்... எமக்கு பிடித்திருந்தது. கதாபாத்திரத்தை விவரிக்கும் அவருடைய அணுகுமுறையும் எமக்கு பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் மறக்க இயலாத சிறந்த அனுபவம் கிடைத்தது.

இப்படத்தின் வெளியீட்டிற்காகவும் ... ரசிகர்களின் வரவேற்பிற்காகவும் ... ஆவலுடன் காத்திருக்கிறேன். அனைவரும் படமாளிகைக்குச் சென்று பார்த்து, ரசித்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51