வணிக சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் சூரி கதையின் நாயகர்களில் ஒருவராக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மண்டாடி' திரைப்படத்தில் இடம் பிடித்த 'உசுரே நீதான் புள்ள..' எனத்தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்தில் சூரி, சுகாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
கடலின் பின்னணியில் பாய்மர படகு போட்டியை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'உசுரே நீதான் புள்ள... உன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் ஜெயஸ்ரீ மதிமாறன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் பின்னணி பாடகி சஞ்சனா கல்மாஞ்சே ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
இதற்கு முன் வெளியான பழைய தமிழ் திரைப்பட பாடலின் சாயல் இருந்தாலும் பாடல் வரிகள் - குரல்- காட்சிகள்- ஆகியவை அனைத்தும் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இடம் பிடித்திருப்பதால்... இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM