சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமந்தா

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 04:40 PM
image

பிரபலமான முன்னணி தொலைக்காட்சிகளில் சமையல் கலை நிபுணர்கள், பிரபலங்கள் பங்கு பற்றும் சமையல் நிகழ்ச்சிகள் பிரசித்தம். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பெண்மணிகளிடத்தில் பாரிய வரவேற்பு உண்டு.

இந்த தருணத்தில் விரைவில் புதிதாக தன்னுடைய ஒளிபரப்பை தொடங்கவுள்ள 'சோனி விழா' எனும் புதிய தொலைக்காட்சியில் 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' எனும் சமையல் கலை தொடர்பான நிகழ்ச்சியை முன்னணி நட்சத்திர நடிகை சமந்தா தொகுத்து வழங்குகிறார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் பிரபலமான சோனி தொலைக்காட்சி நிறுவனம்- செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தமிழிலும் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்களுக்காக சமந்தா ரூத் பிரபு தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் சமையல் அனுபவங்கள், சமையலறையில் உணவை தயாரிப்பதற்காக அதன் சுவைக்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதன் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு பாரிய வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது. மேலும் நட்சத்திர நடிகையான சமந்தா இதனைத் தொகுத்து வழங்குவதால் கூடுதல் கவனம் கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சி சோனி விழா தொலைக்காட்சியில் மட்டும் அல்லாமல் சோனி லைவ் ( Sony Liv) தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51