'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 04:28 PM
image

பான் இந்திய அளவிலான சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் சாகச நாயகனாக நடித்திருக்கும் 'ஃபௌஜி' திரைப்படத்திலிருந்து இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

'சீதா ராமம்' படத்தின் மூலம் இந்திய அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஃபௌஜி' திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

தேசப்பற்று- தேசபக்தி- ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் பிரம்மாண்டமான எக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. டி சீரிஸ் நிறுவனம் இதனை வழங்குகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவித்திருக்கும் படக்குழு, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தின் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதில் கதையின் நாயகனின் ரத்த கறை தோய்ந்த- முகமற்ற உருவமும் , வன்முறை நிகழ்ந்த பூமியில் காந்தியவாதி ஒருவரின் நடைபயணமும்... ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51