நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 04:27 PM
image

நகைச்சுவை  மற்றும் குணச்சித்திர நடிகரான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'தி டோர்ம் (The Dorm) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி டோர்ம்- The Dorm' திரைப்படத்தில் முனீஸ்காந்த், சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா, சிந்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

மாணவர்கள் தங்கும் விடுதியின் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குட் ஸ்டஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஈ. ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்தும் பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முனீஸ்காந்தின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அனைத்து தரப்பினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51