தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ் நடிக்கும் சம்பராலா ஏடி கட்டு - SYG படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 04:26 PM
image

தெலுங்கு திரையுலகின் 'மெகா சுப்ரீம் ஹீரோ'வான நடிகர் சாய் துர்கா தேஜ் அதிரடியான எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் 'சம்பராலா ஏடி கட்டு SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும், இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் உருவாகி வரும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG ' திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த் , அனன்யா நாகள்ள உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

அதிரடியான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பான் இந்திய அளவிலான படைப்புகள் என்பதால்... பிரம்மாண்டமான பட்ஜட்டில் கூடுதலான திட்டமிடலுடன் நிறைவு செய்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் சாய் துர்கா தேஜ் நடித்திருக்கும் 'சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படம்- அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51