நடிகர் 'முருகா' அசோக் - தனது பெயரை அசோக் குமார் பாலகிருஷ்ணன் என மாற்றி அமைத்து, கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'கிட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிட்டி' திரைப்படத்தில் அசோக் குமார் பாலகிருஷ்ணன், திருமாறன், நிஷா, சங்கவி, சிமு அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வி. எஸ். வேலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காதர் இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ரியாஸ்ரீ கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த டீசரின் தொடக்கத்தில், 'கொலை என்பது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றது: ஒன்றை செய்தவுடன் உங்களால் நிறுத்த முடியாது' என்ற வாசகத்தை இடம்பெறச் செய்து.. படத்தில் தொடர் கொலைகள் நிகழும் என்றும், இது தொடர்பான புலன் விசாரணை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் படக் குழுவினர் உறுதியளித்திருப்பதால்... இப்படத்திற்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM