பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

Published By: Digital Desk 2

17 Aug, 2026 | 03:20 PM
image

இன்றைய சூழலில் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது உழைப்பின் மூலம் ஈட்டிய வருவாயை சேமிக்கவே திட்டமிடுவார்கள். ஆனால் வங்கிகளிலோ, வீட்டிலோ.. பணப்பெட்டியிலோ.. பணத்தை சேமித்தால், ஏதேனும் ஒரு வழியில் அவை விரயமாகி கொண்டே வரலாம்.

இதனால் சேமிப்பின் அளவு தொடர்ந்து குறையும்.

இந்நிலையில் உங்களின் சேமிப்பு அதிகரிக்கவும்... சேமித்த பணம் விரயமாகாமல் இருக்கவும்... அதையும் கடந்து விரயமானால் அதனை சுப விரயமாக மாற்றும் பிரத்யேக சூட்சமத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் விவரித்திருக்கிறார்கள்.

கடந்த தசாப்தத்தில் எம்முடைய முன்னோர்கள் இடுப்பில் சுருக்கு பை ஒன்றை செருகி இருப்பதை கண்டிருப்போம்.

இடுப்பு என்பது சேமிப்பை தூண்டும் புதன் பகவானின் அம்சம் என்பதும், சுருக்கு பை என்பது விரயத்தை தடுக்கும் கேது பகவானின் அம்சம் என்பதையும் உணர்ந்து கொண்ட எம்முடைய முன்னோர்கள்... சேமிப்பிற்கு சுருக்கு பையே சிறந்த ஆதாரம் என சுட்டிக்காட்டினார்கள்.

இன்றும் நீங்கள் உங்களது தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைக்கும் போது, வங்கி அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்டு, அந்த தங்க நகைகள் வெள்ளை அல்லது மஞ்சள் வண்ண சுருக்குப் பையில் தான் பாதுகாக்கப்படுகிறது என்பதை பலரும் நடைமுறையில் அறிந்திருப்பர்.

இந்நிலையில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமிக்கும் சிறிய அளவிலான பணத்தைக் கூட சுருக்கு பையில் வைத்து, அதனுடன் சிறிதளவு வெந்தயத்தை பட்டு துணியில் முடிச்சிட்டு இடம்பெறச் செய்ய வேண்டும்.

வெந்தயம் என்பது புதனின் அம்சம் என்பதால்... உங்களுடைய சேமிப்பு பெருகும். அத்துடன் அவை கரையாமல் இருக்கும். அதையும் கடந்து சிறிதளவு விரயமானாலும்.. அவை சுப விரயமாக இருப்பதையும் அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21