தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

குறித்த முடிவானது ஜனாதிபதியின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தே எட்டப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றது