76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயின் ஓவியம் 

Published By: Digital Desk 3

17 Aug, 2026 | 02:50 PM
image

இந்திய சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயின் 76 அடி உயர விழிப்புணர்வு ஓவியத்தை 05 மணி நேரத்தில் வரைந்துள்ளனர்.

அரச பாடசாலைகளில் ஏனைய பாடங்களை போல் ஓவியப் பாடமும் இருந்து வந்தது. 2 பிரிவுகளில் நடைபெற்ற இந்த பாடத்திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் நிறுத்தப்பட்டது. ஒவியக்கலை அனைத்து கலைகளுக்கும் முன்னோடி கலையாகும்.

எனவே, இதை தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பாடசாலைகளில் ஓவிய ஆசிரியர் நியமித்து ஓவியம் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், அழிந்துவரும் ஓவியக் கலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை ஆர்.பி.ஏ பாடசாலை மைதானத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர்  விஜய்யின் அலுவலக மாதிரி பட ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஓவிய பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 76 அடி உயரம் 60 அடி அகலத்தில் ஓவியம் வரைந்து ஓவிய கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 139 ஓவிய மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். தத்ரூபமாக அமைந்த நிலையில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43