(எம்.நியூட்டன்)
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழுவினால் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை (19) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அவ்விழாவில் சைவத்திற்கும் தமிழுக்கும் பல தொண்டுகளையாற்றி எமது சமூகத்திற்கு பல்துறை சார்ந்து பணியாற்றிய பெருந்தகை ஒருவரை இனங்கண்டு கெளரவித்து “யாழ் விருது" வழங்குவது வழக்கமாகும்.
வழமைக்கேற்ப இவ்வருடம் சைவத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பெரும் பணியாற்றியதுடன் நில்லாது பல சமூகப்பணிகளை தற்போதும் மேற்கொண்டு வருகின்ற தகைசால் பேராசிரியர் முனைவர் அருணாசலம் சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியினர் யாழ் விருதினை வழங்கிக் கௌரவிப்பதென சைவ சமய விவகாரக்குழுவினால் ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழு அறிவித்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM