தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. அதில் பேசியபோதே மைத்ரி இத்தகவலை வெளியிட்டார்.

“எங்கள் புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும். இதற்கான ஆரம்ப வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். இப்போது, கட்சிக்கான தொண்டர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

“ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது கட்சியினுள் மறுமலர்ச்சி ஏற்பட முயற்சி செய்தேன். எனினும், எனது முயற்சியால் உறுப்பினர் பதவியை இழந்தேன். எனது புதிய கட்சி மூலம் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாட்டின் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளேன். எனது கொள்கைகளை விரும்பும் எவருக்கும் இந்தக் கட்சியில் இடமுண்டு.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.