கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத நிலையே லால் காந்தவின் தேர்தல் விலகலுக்கு காரணம் – பிரேம்நாத் தொலவத்த

Published By: Digital Desk 2

16 Aug, 2026 | 05:25 PM
image

(செ.கவிஷனா)

அமைச்சர் லால் காந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற திடீர் முடிவுக்கு, கண்டி மாவட்ட மக்களிடம் மீண்டும் சென்று கேட்க முடியாத அளவுக்கு அவர் பெரும் ஏமாற்றத்துக்கும், அரசியல் பின்னடைவுக்கும் உள்ளாகியிருப்பதே பிரதான காரணியாகும். நடைமுறைப்படுத்த இருக்கும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த நிறைவேற்றப்பட்டால் நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படாமல் தள்ளிப்போகலாம் என்ற எண்ணத்திலும் அதன் மூலம் பதவிக் காலத்தைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கலாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் லால் காந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை கருத்து வெளியிட்டுள்ளமை நாட்டின் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கண்டி மாவட்ட மக்களிடம் மீண்டும் சென்று கேட்க முடியாத அளவுக்கு அவர் பெரும் ஏமாற்றத்துக்கும் அரசியல் பின்னடைவுக்கும் உள்ளாகியிருப்பதே இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணமாகும். மேலும், நடைமுறைப்படுத்த இருக்கும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த நிறைவேற்றப்பட்டால் நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படாமல் தள்ளிப்போகலாம் என்ற எண்ணத்திலும் அதன் மூலம் பதவிக் காலத்தைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கலாம். கண்டி மட்டுமன்றி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அனுராதபுரம் பொல்லன்றுவை மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலும் மக்களிடையே அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி எவ்வித ஆபத்தான முடிவுகளையும் எடுக்க கூடாது. நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தையும் ஜனநாயக நடைமுறைகளையும் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்து அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேசிய முக்கியத்தும் வாய்ந்த இவ்விவகாரத்தை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பிற்கு உட்படுத்தி நேரடி மக்கள் ஆணையைப் பெற் வேண்டும். மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மகாநாயக்க தேரர்கள் கத்தோலிக்க திருச்சபை போன்ற பல தரப்பினர் குறித்த 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி தன்னிச்சையாக செயல்படாமல் மக்கள் தீர்ப்பை நாடுவது மட்டுமே ஜனநாயக ரீதியான தீர்வாக அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வரும்...

2026-09-11 13:50:28
news-image

பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டித் தெரிவிலிருந்து...

2026-09-11 18:59:01
news-image

மன்னாரில் கனிம வளங்கள், வனப்பகுதி பிரச்சினைகள்...

2026-09-11 18:57:30
news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12