(க.சிவலிங்கமூர்த்தி)
வட மாகாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டால் பிரபாகரனை வீழ்த்தி காப்பாற்றிய ஒற்றையாட்சித் தன்மை சீர்குலையும் என சர்வஜன அதிகாரம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி அவர்கள் தனது நடிப்புத் திறமையை மிகவும் நுட்பமான முறையில் நாட்டின் மக்களுக்கு உணர்த்தி வருகின்றார்.
அமைச்சர் லால் காந்த குறிப்பிடுவது போன்று சஜித் பிரேமதாச, திலீத் ஜயவீர, நாமல் ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க ஆகிய எவராலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு ஜனாதிபதி ஒரு திறமையான நடிகராகச் செயற்படுகின்றார்.
சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போது 'நான் திறந்த மனதுடன்தான் இந்த கூட்டத்தில் அமர்ந்தேன்' என்று கூறும் ஜனாதிபதி, அதற்கு முன்பே வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் கூட்டத்துக்கு வந்தார்.
தனது தனிப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஏகாதிபத்தியத்தை நோக்கிச் செல்லும் பாதையை அமைத்துக் கொண்டு சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே முயற்சித்தார்.
சுயாதீன அமைப்பான சட்டத்தரணிகள் சங்கத்தின் மீதும் தாக்குதல் நடத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அமைச்சுச் செயலாளர்களுக்குக்கூடத் தெரிவிக்காமல் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்துவிட்டு, தாம் திறந்த மனதுடன் செயற்படுவதாக ஜனாதிபதி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
சர்வதேச சமூகமும் உள்நாட்டினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடியில் பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கும் யோசனை ஒளிந்துள்ளது.
அரசியலமைப்பின் 2ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அரசியலமைப்பின் 146ஆவது பிரிவுக்கு அமைய நாட்டில் ஒரே ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமே இயங்க முடியும்.
ஆனால் வட மாகாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டால், சில காலத்தின் பின்னர் அவர்கள் தமக்கு உச்ச நீதிமன்ற அதிகாரத்தையும் தருமாறு கோருவார்கள். இதன் மூலம் தானாகவே நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை உருவாகிவிடும்.
30 வருட காலமாகப் போராடி, தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் வீழ்த்திப் பாதுகாத்த நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பற்றிப் பின்னர் எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது போய்விடும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகை மற்றும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களின் பின்னணியில், நாடு சமஷ்டி அமைப்பை நோக்கித் தள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.
இங்கு பொய் பூதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை, உண்மையான பூதம் ஒன்று அரசியலமைப்புத் திருத்தத்துக்குள் ஒளிந்திருக்கின்றது.
எனவே, பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா அல்லது பிராந்திய நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானதா என்பது குறித்து ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM