சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கின்றனர் - ரில்வின் சில்வா

Published By: Digital Desk 2

16 Aug, 2026 | 12:15 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நாட்டில் பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் இலாபம் ஈட்டி வந்த தரப்பினரே அரசாங்கம் முன்னெடுக்கும் சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கும் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.

முன்னாள் கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில்"நூற்றாண்டு கண்ட புரட்சி ஒளி பிடல்" எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14) சித்திரப் போட்டி மற்றும் புகைப்படக் கண்காட்சியும் கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரிசியா குவேரா மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எரங்க குணசேகர உள்ளிட்ட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி அமைப்பை முற்றிலும் சீரமைப்பதற்கும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும், இவ்வாறான பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் முறையற்ற வழியில் பெருமளவு பணம் சம்பாதித்து வந்த நபர்களும் குழுக்களுமே அரசாங்கத்தின் இச்சீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

தங்களது சட்டவிரோத வருமான வழிகளும் செல்வாக்கும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால், இத்தகைய சீர்திருத்தத் திட்டங்களை முடக்குவதற்கும் மக்களுக்கு மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்புவதற்கும் அத்தரப்பினர் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

இதேபோன்றதொரு எதிர்ப்பே நாட்டின் ஏனைய துறைகளில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களின் போதும் ஏற்படுகின்றது.

நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக புதிய மெட்ரோ சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது, பழைய ஒழுங்கற்ற முறைகள் மூலம் அநியாயமாக இலாபம் ஈட்டி வந்த பேருந்து கொள்ளையர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியாக்குகின்றனர். "இத்தகைய நவீன மாற்றங்கள் எமது நாட்டிற்குப் பொருந்தாது" என்ற வாதங்களை முன்வைத்து அபிவிருத்திகளைத் தடுக்க முற்படுகின்றனர். 

அதேபோன்று, நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது போதைப்பொருள் வியாபாரிகளும், முறையற்ற அரசுச் சேவையை முறைப்படுத்தி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முற்படும் போது சீர்கேடுகளினால் நன்மையடைந்தவர்களும், ஊழல் மோசடிகளைத் தடுக்கும் போது அதனால் பிழைப்பு நடத்திய சிறிய அளவிலான ஊழல்வாதிக் குழுக்களும் அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளுக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

எந்தவொரு துறையிலும் நேர்மறையான சமூக மாற்றத்தையோ அல்லது சட்டபூர்வமான சீர்திருத்தத்தையோ முன்னெடுக்கும் போது, அதனால் நன்மையடைந்து வந்த சிறு குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளும் சவால்களும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இருப்பினும், அரசாங்கத்தினதும் நிருவாகத்தினதும் முதன்மையான பொறுப்பு என்பது, அத்தகைய எதிர்ப்புகளின் பின்னணியில் உள்ள சுயநல நோக்கங்களைப் புரிந்து கொண்டு, நாட்டின் நன்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு துணிச்சலுடன் தீர்மானங்களை மேற்கொள்வதேயாகும். 

எனவே, பாதாள உலக ஒழிப்பு மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கான நல்ல அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்கும் போது ஏற்படுகின்ற எந்தவொரு அபாயத்தையும் எதிர்கொண்டு, அரசாங்கம் தளர்வின்றி உறுதியுடன் தன் கடமையைச் செய்யும் என ரில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10