நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து வந்து ஒப்படைத்தால் அதுவே சரியானதாக இருக்கும் - அமைச்சர் எரங்க குணசேகர

Published By: Digital Desk 2

16 Aug, 2026 | 12:16 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது சட்டத்தின் ஆட்சிக்கேற்ப குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே. அதனால் நாமல் ராஜபக்‌ஷ சட்டத்தைத் தவிர்க்காமல், தலைமறைவாக இருக்கும் சித்தப்பாவை அழைத்து வந்து ஒப்படைத்தால் அதுவே சரியானதாக இருக்கும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னாள் கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, "நூற்றாண்டு கண்ட புரட்சி ஒளி பிடல்" எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு சனிக்கிழமை (14) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கியூபா தூதுவர் பட்ரிசியா குவேரா மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சில விடயங்களை நிறைவேற்ற, சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் நீதி அமைச்சர், கைதிகளுடன் இணைந்து சில நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

எனவே, நாமல் ராஜபக்‌ஷவுக்கு பல விஷயங்கள் செய்ய முடியும். முன்னாள் சிறைச்சாலைகள் அமைச்சராக ஜோன்சன் பெர்ணான்டோ போன்றவர்கள் இருந்ததாக நினைக்கிறேன். சிறையில் இருப்பவர்கள் அவரை மிகவும் சிறப்பாக நினைவுகூர்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக நாமலின் தந்தையோ அல்லது சித்தப்பாவோ செய்யாத விடயங்களை, இப்போது மரங்களின் மீது ஏறிப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

எனவே, அந்த விடயங்களை நினைவுகூர்ந்து, சிறைச்சாலைக்குள்ளேயே டிரோன் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழியிலோ உரம் தூவிக் கொண்டு இருக்க முடியும்.

எனவே, நாமலுக்கு அது தொடர்பான பணிகளில் ஈடுபட விருப்பம் என்றால் சரி. ஆனால், இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது சட்டத்தின் ஆட்சிக்கேற்ப குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையே ஆகும்.

அதனால் சட்டத்தைத் தவிர்க்காமல், தலைமறைவாக இருக்கும் சித்தப்பாவை அழைத்து வந்து ஒப்படைத்தால் அதுவே சரியானது என்பதைத்தான் நாங்கள் கூற விரும்புகிறோம் என எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10