டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வோல்பெக்கியா (Wolbachia) பக்டீரியாவை சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை அரசுடன் (சுகாதார அமைச்சு ) கைகோர்த்து கொழும்பு மாநகர சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வோல்பாச்சியா பக்டீரியா 60% பூச்சிகளில் காணப்படுகிறது, ஆனால் பொதுவாக டெங்குவின் முதன்மை காவியான ஈடிஸ் எஜிப்ட் வகை நுளம்புகளில் இவ்வகை பக்டீரியா காணப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வோல்பாச்சியா பக்டீரியாவை ஈடிஸ் எஜிப்ட் நுளம்பு முட்டைகளுக்கு செலுத்துவதன் மூலம், நுளம்புகளுக்குள் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதை கடினமாக்கி நுளம்புகள் மூலம் ஒரு நபரிலிருந்து மற்றுமொருவருக்கு வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கிறது.
ஆகையால் அவுஸ்ரேலியா இதற்கு 11 பில்லியன் (1100கோடி ரூபாய் )நிதி உதவி வழங்க முன்வந்துள்ளதுடன், முதற்கட்டமாக இதற்காக வெள்ளவத்தையில் பிரத்யேக ஆய்வு கூடம் ஒன்றை நிறுவி இதன் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்சதார் தலைமையிலான உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து பல்வேறு விடயங்களை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக இலங்கையில் இதுவரை எதிர்பாராத வண்ணம் 1 இலட்சத்தை எட்டவுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையை இனி வரும் காலங்களிலாவது குறைத்து மக்களுக்கு டெங்கு பெருகாதவண்ணம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் கைகோர்த்து இந் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
கொழும்பு மற்றும் நுகேகொடை போன்ற பகுதிகளில் இதன் முதற்கட்ட சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.மேல் மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வழிகாட்டலில் இதன் விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வோல்பாக்கியா பக்டீரியா புகட்டப்பட்ட ஏடிஸ் கொசுக்கள் ஆய்வகங்களில் விசேடமாக வளர்க்கப்படுகின்றன.
வோல்பாக்கியா கொண்ட கொசுக்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் திட்டமிட்டு விடுவிக்கப்படும்.
இவை காடுகளில் உள்ள சாதாரண கொசுக்களுடன் ஜோடி சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்.
காலப்போக்கில் வோல்பாக்கியா உள்ள பாதுகாப்பான கொசுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகரிக்கும் ஆகையால் இந்த நடைமுறையை சரியாக கையாண்டு டெங்கு பெருக்கத்தை கட்டுபடுத்த சுகாதார அமைச்சுடன் கைகோர்த்து கொழும்பு மாநகர சபை கொழும்பில் டெங்கு பெருக்கத்தை முழுமையாக இல்லாது ஒழிக்க சகல நடவடுக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் வட கொழும்பு பிரஜா சக்தி திட்டத்தின் தலைவருமான எஸ். ஆனந்தகுமார் மேலும் தெரிவித்தார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM