ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு!

16 Aug, 2026 | 08:56 AM
image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை அளித்துள்ளனர்.

அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10