22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில் சமர்ப்பணம் ; எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் உயர் நீதிமன்றம் செல்லத் தீர்மானம

Published By: Digital Desk 3

16 Aug, 2026 | 08:39 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம், நாட்டின் நீதித்துறை மற்றும் அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்துப் போராடப் பல்வேறு எதிர்க்கட்சிகள் தற்போது முடிவு செய்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இது தொடர்பான விவாதத்துக்கான திகதியை நிர்ணயித்தல் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அரச தரப்பு தீர்மானிக்கும். இவ்வாறானதொரு சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக உயர் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்துள்ளதுடன், சிவில் அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களும் 22 ஆவது திருத்தத்தைச் சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 65 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது. எனினும், பிரதம நீதியரசர் ஓய்வு பெற வேண்டிய திகதியானது, அவருக்கு 67 வயதாகும் திகதி அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் நிறைவடையும் திகதி ஆகிய இரண்டில் எது முதலில் வருகிறதோ அந்தத் திகதியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நகர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக இத்தகைய மாற்றங்களை மேற்கொள்ளவே முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளதால், கூட்டு எதிர்க்கட்சி சார்பில் தான் உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளை நினைவூட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது நலம் சார்ந்த பிணைப்போ உள்ள எந்தவொரு அரச அதிகாரியும் அது தொடர்பான முடிவுகளிலோ அல்லது வாக்களிப்பிலோ பங்கேற்க முடியாது என்றும், மீறினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அரச அதிகாரிகள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்குவதால், தங்களின் சொந்த ஓய்வுபெறும் வயது தொடர்பான இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் சட்டரீதியான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு கிடையாது என்றும் பீரிஸ் விளக்கமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10