‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி சாய்ந்தமருதில் கைது: ஆகஸ்ட் 19 வரை விளக்கமறியல்!

16 Aug, 2026 | 08:40 AM
image

நீண்டகாலமாகச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்திப் பெண்) என அழைக்கப்படும் பெண் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு (76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை (13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதன நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கல்முனை புறநகர்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து 2,310 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸார் சோதனையிட வரும் சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளிலிருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப் பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று, நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாகப் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இச் சோதனை நடத்தப்பட்டது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.பிரகலாதன் தலைமையில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775), நிவேதன் (94680), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி (10669) உள்ளிட்ட குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10