சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி போராட்டம்

Published By: Digital Desk 2

16 Aug, 2026 | 08:39 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அரசியல் கட்சிகளும், சிவில் தரப்பினரும் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் நாளை மறுதினம் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

சட்டமூலம் இரண்டும் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் அரசியலமைப்பு தன்மையை சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்கள் 14 நான்கு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்ய  முடியும்.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதிக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது 22 ஆவது திருத்தத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இருப்பினும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜனாதிபதி நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறான நிலையில் நாளை மறுதினம் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10