அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது ஏன்?

16 Aug, 2026 | 08:35 AM
image

நீதி­ப­தி­களின் ஓய்வு பெறும்  வய­தெல்­லையை  நீடிப்­ப­தற்­கான 22ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தை கடும் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் வர்த்­த­மா­னியில்  பிர­சு­ரித்­துள்ள அர­சாங்கம்,  அதனை  நிறை­வேற்­று­வ­தற்கு  கடும் பிர­யத்­த­னத்தில்  ஈடு­பட்டு வரு­கின்­றது.

இந்த சட்­ட­மூ­லத்­துக்கு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உட்­பட  உள்­நாட்டு, வெளி­நாட்டு  நீதித்­து­றைசார்  அமைப்­புக்கள்  கடும் எதிர்ப்பு  தெரி­வித்­துள்­ளன.  நாட்டின் நான்கு  பெளத்த  பீடங்­களும்  நீதி­ப­தி­களின் ஓய்வு பெறும் வய­தெல்­லையை நீடிக்கும்  விவ­காரம் தொடர்பில் தமது அதி­ருப்­தியை  வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இது குறித்து ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு நான்கு பெளத்த பீடா­தி­ப­தி­களும் ஒன்­றி­ணைந்து கடி­தமும்  அனுப்­பி­யி­ருந்­தனர்.

இதை­விட  நாட்­டி­லுள்ள பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி உட்­பட சகல எதிர்க்­கட்­சி­யி­னரும் இந்த  திருத்தச் சட்­ட­மூ­லத்­துக்கு  கடு­மை­யான எதிர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றனர்.  உயி­ரைக்­கொ­டுத்­தேனும்  சட்­டத்­தி­ருத்­ததை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு  அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று  பொது எதி­ரணி சார்பில்   அதன் இணைப்­பாளர்  முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்  அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இவ்­வாறு  சர்­வ­தே­சத்­திலும்  உள்­ளூ­ரிலும் பெரும் எதிர்ப்­புக்கள்  கிளம்­பி­யுள்ள நிலை­யிலும்  நீதி­ப­தி­களின்  ஓய்வு பெறும் வய­தெல்­லையை அதி­க­ரிப்­ப­தற்­கான  திருத்தச் சட்­ட­மூ­லத்தை   நிறை­வேற்றும் விட­யத்தில்   தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம்  கங்­கணம் கட்டி  நிற்­கின்­றது. நாட்டில் 11 இலட்சம் வழக்­குகள் வரையில் தேங்­கிக்­கி­டப்­ப­தா­கவும் அந்த வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டு­மானால்  நீதி­ப­தி­களின் வய­தெல்­லையை நீடிக்­க­வேண்­டி­யது  அவ­சியம் என்றும் அர­சாங்கம்   விளக்­க­ம­ளித்து வரு­கின்­றது.  ஆனால், இத்­த­கைய  ஓய்­வு­பெறும் வய­தெல்­லையை  அதி­க­ரிக்கும் விவ­காரம்  நீதித்­து­றையின் சுயா­தீ­னத்தை இல்­லா­தொ­ழிக்கும் செயற்­பாடு என்று  எதி­ர­ணி­யினர்  விமர்­சித்து வரு­கின்­றனர்.

தற்­போது  நீதி­ப­தி­களின்  பத­விக்­கா­லத்தை நீடிக்கும்  வகை­யி­லான 22 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் வர்த்­த­மா­னியில்  பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. விரைவில் பாரா­ளு­மன்­றத்தில்  அதனை சமர்ப்­பித்து  நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம்  திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றது.  இந்த சட்­ட­மூ­லத்தை  உயர்­நீ­தி­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்த  தற்­போது பொது எதி­ரணி  நட­வ­டிக்கை  எடுத்து வரு­கின்­றது.  இதே­போன்றே பல்­வேறு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் இதனை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆலோ­சித்து வரு­கின்­றன.

இந்த சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்ற வேண்­டு­மானால்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும் என்று  எதி­ர­ணி­யினர் கோரி வரு­கின்­றனர்.  சட்­ட­மூ­லத்தை சவா­லுக்­குட்­ப­டுத்தி உயர்­நீ­தி­மன்­றத்தை   எதி­ர­ணி­யினர் நாடும் போது   இதனை  பாரா­ளு­மன்­றத்தில்  சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடி­யுமா, அல்­லது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்ற முடி­யுமா, இல்­லையேல்  இவற்­றுடன்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்த வேண்­டுமா என்ற  தீர்­மானம்  அறி­விக்­கப்­படும். இதற்­கி­ணங்க   திருத்தச் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றும் என்று அர­சாங்கம் தற்­போது   அறி­வித்­தி­ருக்­கின்­றது.

எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் இது­வரை  21 திருத்­தங்கள்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.  1994 ஆம் ஆண்­டுக்கு முன்னர் 17 வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக  ஐக்­கிய தேசி­யக்­கட்சி   ஆட்சி  செய்து வந்­தது.  அந்த வேளையில்  13ஆவது திருத்தச் சட்டம் உட்­பட  பல்­வேறு திருத்­தங்கள்   மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள்  சுதந்­திர முன்­னணி  அர­சாங்க காலத்தில் 18ஆவது திருத்தம்   நிறை­வேற்­றப்­பட்­டது.  செப்­டெம்பர் மாதம்  8ஆம் திகதி இதற்­கான விவாதம்  பாரா­ளு­மன்­றத்தில் நடத்­தப்­பட்டு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  இந்த திருத்தம்  அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.  ஜனா­தி­பதி தேர்­தலில்  ஒருவர் இரண்டு தட­வைகள் மாத்­தி­ரமே போட்­டி­யிட முடியும் என்ற  விடயம்  மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு  மூன்று தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் போட்­டி­யிட முடியும்  என்ற  சரத்து  சேர்க்­கப்­பட்­டது.  தான் மூன்­றா­வது தட­வையும் ஜனா­தி­ப­தி­யாக வர­வேண்டும் என்ற ஆதங்­கத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கா­கவே  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்த திருத்­தத்தை  கொண்டு வந்­தி­ருந்தார். வெறும் சுய­நல  அர­சியல் நோக்­கோடு இந்த 18ஆவது திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி  அர­சாங்கக் காலத்தில்  19ஆவது திருத்தம்  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. 18ஆவது திருத்­தத்தில் ஒருவர் எத்­தனை தடவை வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்ற விட­யத்தை  முடி­வுக்கு கொண்டு வரும் வகை­யிலும் ஜனா­தி­ப­தியின் சில  அதி­கா­ரங்­களை குறைக்கும் முக­மா­கவும் இந்த திருத்தச் சட்­ட­மூலம்  பாரா­ளு­மன்­றத்தில்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

பின்னர் 2020ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம்  முன்னாள் ஜனா­தி­பதி  கோட்­டா­பய ராஜபக் ஷவின் ஆட்­சியில்  20 ஆவது திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.  2022ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத­ம­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் 21 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது.  தற்­போது தேசிய மக்கள் சக்­தியின் ஆட்­சியில் 22 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு  தீவிர பிர­யத்­தனம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது  ஜனா­தி­பதி தேர்­தலின் போதும்  பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போதும்   பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது. இனப்­பி­ரச்­சி­னைக்கு  அர­சியல் தீர்வு  காணப்­படும்.  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு  காணப்­படும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம்  அர­சியல் தீர்வு  முன்­வைக்­கப்­படும் என்­றெல்லாம் உறு­தி­மொழிகள் வழங்­கப்­பட்­டன.  அர­சியல் தீர்வு காணப்­படும் வரையில்  தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள மாகா­ண­சபை முறைமை அமுல்­ப­டுத்­தப்­படும்  என்றும்  வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், அர­சாங்கம் பத­வி­யேற்று  இரண்டு வரு­டங்கள் ஆகின்­ற­போ­திலும்  சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கிய   வாக்­கு­று­திகள் இது­வ­ரையில்  நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் அக்­க­றை­யற்ற தன்மை நீடித்­து­வ­ரு­கின்­றது.  நல்­லாட்சி அர­சாங்கக்  காலத்தில் புதிய  அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.  அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு  பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் கட்­சி­களின் தலைவர்  அந்­தக்­கு­ழுவில் அங்­கத்­துவம் வகித்து  புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.  இதன்­போது   இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக ஒரு­மித்த நாட்­டுக்குள்  மீளப்­பெ­றப்­பட முடி­யாத அதி­கா­ரங்­களை  மாகா­ணங்­க­ளுக்கு  வழங்­கு­வது தொடர்பில்  யோசனை முன்­வைக்­கப்­பட்ட  இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்று அர­சியல் தீர்வு தொடர்பில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது அன்­றைய  எதிர்க்­கட்சித் தலை­வரும்  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான  இரா. சம்­பந்தன்  பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டு அர­சியல் தீர்­வுக்கு  அடி­கோ­லு­வ­தற்­கான  முயற்­சியை  மேற்­கொண்­டி­ருந்தார்.

அத்­த­கைய அர­சியல் தீர்வைக் கொண்ட  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சியை விட்ட இடத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்போம் என்றே  தேசிய மக்கள் சக்தி  வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. ஆனால், இன்று  அந்த  விடயம் குறித்து  பேசு­வ­தற்­குக்­கூட அர­சாங்கம்  தயா­ராக இல்­லாத நிலைமை  நீடிக்­கின்­றது.  அண்­மையில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை தமிழ்ப்பேசும்   கட்­சி­களின் தலை­வர்கள்  சந்­தித்த போது  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சியில் கால­தா­மதம் ஏற்­பட்டு விட்­ட­தா­கவும் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி உறுதி வழங்­கி­யி­ருந்தார்.  ஆனால்,  அதற்­கான முயற்­சிகள்  எடுக்­கப்­ப­டு­வ­தாக  தெரி­ய­வில்லை.

தற்­போது  நீதி­ப­தி­களின்  ஓய்வு பெறும் வய­தெல்­லையை  நீடிப்­ப­தற்­கான  22 ஆவது சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு  கடும் பிர­யத்­தனம் செய்யும் அர­சாங்கம்  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சி­யையோ அல்­லது அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­க­ளையோ  எடுக்­கா­தி­ருப்­பது  கவலைக்குரிய விடயமாகும்.  தற்போது தெற்கின் கடும் எதிர்ப்புக்களுக்கு  மத்தியில்  பெளத்த பீடங்களின்  ஆலோசனைக்கு மாறாக செயற்பட்டு 22 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முனையும்  அரசாங்கம் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவில்  நடவடிக்கைகளை  முன்னெடுக்க முடியும்.  ஆனால், அது குறித்து அக்கறையின்றி  அரசாங்கம்  செயற்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் விடயத்தை முன்னெடுத்தால் தெற்கில் எதிர்ப்புக்கள் கிளம்பும் என்று அரசாங்கம்  அச்சப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும்  கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால், 22ஆவது திருத்தச் சட்டத்தை  தெற்கின் எதிர்ப்புக்களுக்கு  மத்தியில் நிறைவேற்றத் துடிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் தீர்வு  முயற்சியையும்  தீவிரப்படுத்த முடியும்.

எனவே இனியும் சாக்குப் போக்குகளை கூறாது  அரசியல் தீர்வு விடயத்திலும் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையிலும் அரசாங்கம்  அக்கறை காட்ட வேண்டுமென்று  வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13