ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்: பொலிஸ் ஊடகப் பிரிவு!

16 Aug, 2026 | 08:35 AM
image

(நமது நிருபர்) 

தற்போதைய பொலிஸ் மா அதிபராக  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்றத்தன் பின்னரான  ஒருவருடக்காலப் பகுதிக்குள் வெளிநாடு சென்று  தலைமறைவாகியிருந்த 63   ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதுடன், மேலும்  113 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகள் அடங்கிய அறிக்கை  பொலிஸ் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த ஒருவருட காலப்பகுதியில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த  63 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதுடன், மேலும்  113 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 7,71,580 போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 5,246 கிலோ ஹெரோயின், 43,600 கிலோ கஞ்சா மற்றும் 9,490 கிலோ ஐஸ்  உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 7,70,098 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 6,966  சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களத்தின்  செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் 4,680 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும்  வழங்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அதிகாரிகளின் நலன்புரியைக் கருத்திற்கொண்டு புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்பு தயாரிப்பு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரித்தல், சீருடை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குறைகளைக் கேட்டறிவதற்காக பிரத்யேக நிவாரண அறைகள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன்,2026 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு 7,500 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10