வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்; யாழில் மாநாட்டுக்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

16 Aug, 2026 | 08:27 AM
image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், அன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்படும்.

அதன் நீட்சியாக இவ்வருடமும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டறிவதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படும். அதுமாத்திரமன்றி உள்ளகப்பொறிமுறைகளின் தோல்வியின் விளைவாக சர்வதேச பொறிமுறையொன்றை இம்மாநாட்டின் ஊடாக வலியுறுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மேற்படி சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்தறையிலும் நினைவுகூரல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க அன்றைய தினம் (25) தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மாத்தறையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53