தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 இரு தரப்பினருக்குமிடையில் இன்று முற்பகல் 9.30  மணி முதல் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தநிலையில், தம்மால் முன்வைக்ப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.