மரண தண்டனைக்குத் தடை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் : இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய யோசனைகள்!

15 Aug, 2026 | 05:37 PM
image

(நமது நிருபர்)

இலங்கையானது  மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதன் ஒரு கட்டமாக அதற்கு உத்தியோகபூர்வத் தடையை  விதித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி சர்வதேசத் தர நிலைகளுக்கு அமைவான புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தை  திருத்துதல் அல்லது திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல யோசனைகளை  ஐரோப்பிய ஒன்றியம் முதன்மை  யோசனைகளாக முன்வைத்துள்ளது.

இலங்கைக்குக் கிடைத்துள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் விசேட வர்த்தக வரிச்சலுகைக்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தினால்  தயாரிக்கப்பட்ட புதிய மதிப்பீட்டு அறிக்கை ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலைமையை ஆராய்ந்து இந்தப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ள பிரதான விடயங்களுள், தேசிய மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் பால்புதுமையின  சமூகத்தினரைப் பாதுகாக்கும் வகையில் பாகுபாடுகளுக்கு எதிரான பரந்த சட்டங்களை இயற்றுதல் மற்றும் ஒரே பாலின ஈர்ப்பைக் குற்றமற்றதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துதல் என்பன அடங்குகின்றன.

மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதன் ஒரு கட்டமாக அதற்கு உத்தியோகபூர்வத் தடையை  விதித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  நீக்கி சர்வதேசத் தரநிலைகளுக்கு அமைவான புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தை  திருத்துதல் அல்லது திரும்பப்பெறுதல் ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினரால் சிவில் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை நிறுத்துதல், பொலிஸ் காவலில் உள்ளவர்கள் உயிரிழப்பது மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக முறைமை சார்ந்த பொறுப்புக்கூறலை உருவாக்குதல் குறித்தும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாகச் செயல்படுத்துதல் மற்றும் சிறுவர் திருமணங்களைத் தடை செய்வதன் மூலம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியமும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

27 சர்வதேச உடன்படிக்கைகளைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்து மதிப்பிட்டு வெளியிடப்படும் இந்த அறிக்கை, ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைத் தொடர்ந்து பேணுவதற்கான இரு தரப்பு உரையாடலின் முதன்மை கருவியாகக் கருதப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையின் கீழ் 2024ஆம் ஆண்டில் மட்டும் 139 மில்லியன் யூரோ (பில்லியன் கணக்கிலான ரூபா) சுங்க வரிவிலக்குகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன.

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கு அனுப்பப்படும் ஒட்டுமொத்தப் பொருட்களுள் 83.5  சதவீத இந்த ஜி.எஸ்.பி.பிளஸ்  சலுகைக்கு உட்பட்டதுடன், ஆடைகள் மற்றும் மீன்பிடி உற்பத்தித் துறைகள் இதனுடன் நேரடியாகத் தொடர்புடையவை.

2024ஆம் ஆண்டில் பெறப்பட்ட 68.9 சதவீத ஜி.எஸ்.பி.பிளஸ் பயன்பாட்டு வீதம்  மூலமாக, எதிர்வரும் காலங்களிலும் நாட்டின் பொருளாதாரம் இதன் மூலம் அதிக நன்மைகளைப் பெற முடியும் என்பது புலனாகிறது.

எனவே, இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நாட்டின் ஏற்றுமதித் துறையின் நிலைத்தன்மைக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10