ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

15 Aug, 2026 | 05:08 PM
image

எம்மில் பெரும்பாலானவர்கள் போதிய அளவில் நீர் அருந்தாததால், சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படுவதை பற்றி தெரிந்து வைத்திருப்போம்.

இந்தக் கல் சிறியதாகவும், சிறுநீர்ப்பாதையில் அடைப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் சிலருக்கு ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் என மருத்துவ மொழியில் சொல்லப்படும் ஒரு வகையான சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படும் என்றும், அதற்கு உரிய தருணத்தில் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பொதுவாக ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் எனும் சிறுநீரக கல், பெரிய அளவிலான கிளைகளைக் கொண்ட சிறுநீரகத்தை பாதிக்கும் கற்களாகும்.

இவற்றின் அளவு பெரிதாக பெரிதாக உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை உண்டாக்கும்.

இதனை எளிய மக்களின் புரிதலுக்காக விவரிக்க வேண்டும் என்றால், அளவில் பெரியதான சிறுநீரகத்தை சிதைக்க கூடிய கல் என குறிப்பிடலாம். ஒரு ஆண் மானின் கொம்புகளை ஒத்த வடிவம் கொண்டதாக இவை இருக்கும்.

அத்துடன் இத்தகைய சிறுநீரக கற்கள் ஸ்ட்ரூவைட் எனும் கனிமத்தாலானது. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொடர் தொற்றுகள் பாதிப்பின் காரணமாக இவை உருவாகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

மரபணு மாற்றம் வாழ்க்கை முறை உணவு முறை என பல்வேறு காரணங்களால் இத்தகைய பிரத்யேக சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பொதுவாக இவை முப்பது வயதிற்கு மேற்பட்ட மற்றும் அறுபது வயதுக்குள்ளாக இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது என்றும் , பெண்களை விட ஆண்கள் சதவீத அளவில் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

முதுகு வலி அல்லது பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான வலி, சிறுநீரில் குருதி, சிறுநீர் நிறமாற்றம், இயல்புக்கு மீறிய அளவில் சிறுநீர் கழித்தல், குமட்டல் ,வாந்தி, காய்ச்சல், சளி என பல்வேறு அறிகுறிகளை கொண்டிருக்கும்.

இத்தகைய அறிகுறி கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் பைலோகிராம் எனும் பிரத்யேக சோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

வைத்தியர் புஷ்கர் ஷ்யாம்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-25 16:33:02
news-image

முதுகு தண்டு வட பாதிப்பிற்கான நவீன...

2026-08-24 16:53:43
news-image

செப்டிக் என்செபலோபதி : மூளையில் ஏற்படும்...

2026-08-21 17:56:50