''காதல் பாடல்கள் ஆயிரம் பிறந்தன, புலவர்களால் முழுமையாக சொல்ல முடியவில்லை.
போர்கள் ஆயிரம் நடந்தன, எவராலும் முழுமையாக வெல்ல முடியவில்லை.
கடவுளும், காதலும் ஒன்று உணரும் வரை வெறுமை உணர்ந்தால் முழுமை'' என தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் காதலைப் பற்றி கவிதையாக அறிமுகப்படுத்திய 'ஆசை வரமே..' எனும் 'அன்பில் அவன்' படத்தின் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமது, கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற 'நேர நதி தீரும் வரை நீல அலை ஓயும் வரை..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலை பாடலாசிரியர் மெட்ராஷீ எழுத பின்னணி பாடகி சின்மயி மற்றும் இசையமைப்பாளரும், பாடகருமான கோவிந்த வசந்தா ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
மெல்லிசை, மெட்டு, பாடல் வரிகள், நிலவியல் சூழல், இசை கோர்வை, திரை மொழி விவரணம் என அனைத்து அம்சங்களும் இரண்டற கலந்து உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு மெல்லிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலுக்கான பட்டியலில் இப்பாடல் இணைந்திருக்கிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM