'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது மனதில் இடம் பிடித்த நடிகர் குரு சோமசுந்தரம் பிரத்யேகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பாரிஸ் கஃபே' எனும் புதிய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சராஜ் சீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாரிஸ் கஃபே' திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், அனு மோள், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயன சாய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.
எமோஷனல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எல் வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தண்டர் மீடியா நிறுவனம் வழங்குகிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் மனித உறவுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல், முரண்பாடு தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM