(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பயின்ஷிப்பில் தோல்வி அடையாமல் இருக்கும் மூன்று அணிகளில் ஒன்றான கொட்டாஞ்சேனை றினோன் கழகம் இன்று தனது ஐந்தாவது போட்டியில் பேருவளை ரெட் ஸ்டார் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாடரங்கில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருட ம் றினோன் கழகம் 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் அணிகள் நிலையில் தற்போது 3ஆம் இடத்தில் இருக்கிறது.
இக் கழகம் 16 கோல்களைப் போட்டுள்ளதுடன் எதிரணிகளுக்கு ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்கவில்லை.
மறுபுறத்தில் ரெட் ஸ்டார் கழகம் தனது 4 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு, 2 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளில் றினோன் கழகம் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கின்றபோதிலும் போட்டிக்கு போட்டி முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் ரெட் ஸ்டார் கழகம் இன்றைய போட்டியில் சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
றினோன் கழகத்தினர் தமது எதிரணிகளின் பலம் பலீனங்களை நன்கு அறிந்து சிறந்த வியூகங்களை அமைத்து சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்.
இன்றைய தினமும் றினோன் கழகம் சிறந்த வியூகங்களுடன் விளையாடி வெற்றியீட்டி அணிகள் நிலையில் மீண்டும் முதலிடத்தை அடைய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM