கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களைக் காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் இன்று சனிக்கிழமை (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முதலாம் ஆண்டிற்கான தமிழ் மொழி செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் அடங்கலாக 19,892 புத்தகங்கள் உரிய விநியோக மையத்திற்கு ஒப்படைக்கப்படாமல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இச்சந்தேக நபர்கள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 விநியோக மையங்களுக்கு முதலாம் தரத்தின் 3ஆம் தவணைக்கான பாடநூல்களைக் கொண்டு சேர்ப்பதற்காக, கடந்த மே 4ஆம் திகதி பியகம பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
எனினும், அப்புத்தகங்கள் உரிய மையங்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உற்பத்தி மற்றும் விநியோக ஆணையாளர் கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய தலங்கம பொலிஸார், அரசாங்க சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை (14) 5 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
விசாரணைகளில், பாடநூல்களைக் கொண்டு சென்ற லொறி சாரதி (முதலாம் சந்தேக நபர்), 1,700 கிலோகிராம் எடையுள்ள அத்தனை பாடநூல்களையும் அலவ்வ பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கொள்முதல் செய்யும் நபர் ஒருவருக்கு கிலோவை 25 ரூபா வீதம் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், அப்பொருட்களைக் கொள்முதல் செய்த இரண்டாம் சந்தேக நபர், அவற்றை கிலோ 40 ரூபா வீதம் நாரம்மல பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு மீண்டும் விற்றுள்ளார். அவரிடமிருந்து அப்புத்தகங்களை கிலோ 50 ரூபாவிற்கு வாங்கிய மூன்றாம் சந்தேக நபர், அவற்றை நிகவரெட்டிய பகுதியைச் சேர்ந்த நான்காம் சந்தேக நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
நான்காம் சந்தேக நபர் அந்தப் பாடநூல் தொகுதியை வத்தளை, நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள, பழைய பேப்பர்களை அட்டைப் பெட்டிகளாக மாற்றி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, லொறி சாரதியான முதலாம் சந்தேக நபர் கடந்த 2023ஆம் ஆண்டு கஞ்சா கைவசம் வைத்திருந்தமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காகவும், 2024ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமைக்காகவும் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசாங்க சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நஷ்டம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM