சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கில், இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக இரகசிய பொலிஸார் இன்று (12) கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு ஆஜரான இரகசிய பொலிஸ் பிரதிநிதி, பெறப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி சம்பாஷணைகள் குறித்த விபரங்கள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.