தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான். இலஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம் என்று இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இன்று (15)நடைபெற்ற இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் நொறுங்கும்.
தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம். சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு வளர்கிறோம்.
வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு அளிக்கப்பட்டாலும், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம்.
கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் கைவிடப்படவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 100 நாள் திட்டம் 125 நாள்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 3 மாதத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் நலனே முக்கியம்.
மக்களே இனிதான் நீங்கள் நம்முடன் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும். நான் உட்பட அனைவரும் உங்களின் சேவகர்கள். நமது அரசுக்கு எதிரான அதிகளையும், சக்திகளையும் முறியடிப்போம்.
இந்த விழாவில் விருதுகளை வாங்கப்போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM