சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முதல்வர் விஜயின் தந்தைக்கு அருகில் அமர்ந்த திரிஷா!

15 Aug, 2026 | 11:24 AM
image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை திரிஷா, தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று இந்திய நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுதந்திர தின நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக நடிகை திரிஷா, தனது தாயார் உமாவுடன் வருகை தந்திருந்தார்.

இதன்போது விழா மேடையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் பக்கத்து நாற்காலியில் திரிஷா அமர்ந்தமை பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. 

மேலும், திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43