மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம் இலகுவில் வீழாது – அமைச்சர் லால்காந்த

Published By: Vishnu

15 Aug, 2026 | 06:01 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த அரசாங்கம் நாட்டில் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு பின்னர் ஆட்சிக்கு  வந்த அரசாங்கமாகும். அத்துடன் மக்களும் மாற்றமடைந்து, ஏற்படுத்திய அரசாங்கமாகும். அவ்வாறான அரசாங்கம் இலகுவில் வீழ்வதில்லை. அவ்வாறு வீழ்த்துவதற்கு பலமான எதிர்கட்சி ஒன்றும் இல்லை என அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.

கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சாதாரணமாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அல்ல. நாட்டில் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு பின்னர் இடம்பெற்ற தேர்தலுக்கு பின்னர் வந்த அரசாங்கமாகும். இதற்கு முன்னர் ஆட்சி மாற்றங்களுடன் சாதாரணமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அல்ல. மக்களும் மாற்றமடைந்து, மாற்றத்துக்காக ஏற்படுத்திய அரசாங்கமாகும். அவ்வாறான அரசாங்கம் இலகுவில் வீழ்வதில்லை. இவ்வாறான அரசாங்கங்கள்  ஆட்சிக்குவரும்போது, எதிர்க்கட்சிகள் முற்றாக வீழ்ச்சியடைந்து, தலைதூக்க முடியாத நிலையில் இருக்கும். மற்ற காலங்களில் புதிய அரசாங்கம் ஒன்று நாட்டில் ஆட்சிக்கு வரும்போது எதிர்க்கட்சி முற்றாக பலவீனமடைவதில்லைை.

அதனால்தான் தற்போது எதிர்க்கட்சிகள் எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் உயிராேட்டமான எந்த நடவடிக்கையும் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது. இன்று நாட்டில் சரியான ஒரு எதிர்க்கட்சி ஒன்று இருக்கிறதா? எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இருக்கிறாரா? பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரை எமது எதிர்க்கட்சித் தலைவர் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். ஆனால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கிறாரா என கேட்கிறேன். மக்களுக்கு அரசாங்கத்துக்கு எதிராக இணைந்து செயற்பட ஒரு இடம் இருக்கிறதா என கேட்கிறேன். அதனாலே இந்த அரசாங்கம் ஒருபோதும் விழப்போவதில்லைை என நாங்கள் உறுதியாக தெரிவிக்கிறோம்.

அதேநேரம் நான் இதன் பின்னர் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இந்த முறையும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே போட்டியிட்டேன். நாட்டுக்கு சேவை செய்வதற்கு பாராளுமன்றத்திலோ அரசியலிலோ இருக்க தேவையில்லை. எமது கட்சியின் செயலாளர் ஒருபோதும் தேர்தலில் பாேட்டியிட்டதில்லை. ஆனால் அவர் தொடர்ந்து செயற்பாட்டு அரசியலில் இருந்து வருகிறார். 

அத்துடன் மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதாக இருந்தால், மக்கள் எதற்காக மாற்றம் ஒன்றை கேட்டார்கள். அதனால் இதுதொடர்பில் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்க வேண்டி இருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08