(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் புளூ ஈக்ள்ஸ் அணியை கடும் பிரயாசத்திற்கு மத்தியில் கலம்போ எவ்சி 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.
போட்டியின் முதலாவது பகுதியில் கலம்போ எவ்சி திறமையாக விளையாடிய போதிலும் இடைவேளைக்குப் பின்னர் அவ்வப்போது சிரமத்தை எதிர்கொண்டது.
அதேவேளை, புளூ ஈக்ள்ஸ் அணி வீரர்கள் கலம்போ எவ்சியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த போதிலும் அதன் முன்கள வீரர்களிடம் கோல் புகுத்தக்கூடிய நுட்பம் எதுவும் இருக்க வில்லை.

புளூ ஈக்ள்ஸின் ஓரிரு அரைகுறை வாய்ப்புகளை கலம்போ எவ்சியின் அனுபவம் மிக்க கோல் காப்பாளர் மொஹமத் இம்ரான் மிகச் சிறப்பாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
போட்டியின் 34ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சி அணிக்கு கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை மஹ்மூத் அலி எல்ஷஸ்லி உயர்த்தி உதைத்தபோது பந்தை நோக்கி தாவிய கோல் காப்பளார் மொஹமத் முர்ஸித் தனது முஷ்டியால் முன்னோக்கி தட்டிவிட்டார்.

அந்தப் பந்தை கட்டுப்படுத்திய கலம்போ எவ்சி வீரர் மொஹமத் அப்துல்லா வலப்புறத்திலிருந்து புளூ ஈக்ள்ஸ் கோலை நோக்கி மீண்டும் உயர்வாக செலுத்தினார்.
அந்தப் பந்தை உமர் மொஹமத் ஷக்கில் தனது தலையால் பின்னோக்கி முட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கலம்போ எவ்சியை 35ஆவது நிமிடத்தில் முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து 70ஆவது நிமிடம் வரை தொடர்ச்சியாக எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த கலம்போ எவ்சி அவ்வப்போது கோல் கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டை விட்டது.

மறுபக்கத்தில் புளூ ஈக்ள்ஸ் அணி தனக்கு கிடைத்த இரண்டு, மூன்று அரை குறை வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்த தவறியது.
இறுதியில் கலம்போ எவ்சி 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM