நீதிமன்ற சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் கொள்கையில் அரசாங்கம் ஈடுபடுகிறது – சஜித் பிரேமதாச

Published By: Vishnu

14 Aug, 2026 | 10:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் கொள்கையில் ஈடுபட்டு வருகின்றது.ஒரு நபரின் அல்லது ஒரு சில குழுக்களின் நோக்கங்களை மையமாகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வது வெட்கக்கேடான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து வெள்ளிக்கிழமை (14) உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

முறைமையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி ஜனாதிபதி தனது செயற்பாட்டை மக்கள் முன் வைத்தார். தற்போது காணப்படும் அரசியலமைப்பைத் திருத்தி, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்தது.  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முறைமை மாற்றத்திற்கு எவ்வித மக்களாணையும் அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை. 

இது நிறைவேற்றுத்துறையும் அதன் பினாமிகளும் இணைந்து ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். ஜனாதிபதிக்கு விருப்பமான முறையில் இந்த மாற்றங்களைச் செய்ய முடியாது. நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சிதைத்து, நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டினை பலவீனப்படுத்த எந்த மக்கள் ஆணையும் கிடைக்கவில்லை. முறைமையை மாற்றுகிறோம் என்று கூறி அரசாங்கம் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து வருகின்றது. 

அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு நாட்டிற்கு பாதகமான பாரதூரமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஐக்கிய நாடுகள் சபை கூட இது தொடர்பில் ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தி ஏற்றுமதித் துறைக்கே கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்நடவடிக்கை மூலம் அரசாங்கம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். 220 இலட்சம் மக்களே இந்த ஆபத்தின் விளைவுகளை எதிர்கொள்வர்.

நாட்டை ஆளும்போது ஆபத்துகள் உருவாவதைப் போன்று வாக்காளரும் சில ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள். 12 மில்லியன் ரூபாவிற்கு கார், 33 வீத  மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் விவசாயிகளுக்கு 150 ரூபா நிலையான விலை என்பவற்றை மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இன்று அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் கடன்களை மறுசீரமைக்கக் கூட அரசாங்கம் தலையிடவில்லை. இன்று அவர்களது சொத்துக்கள் கூட அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

மேலும் அரசியலமைப்பின் 3, 4, 83 ஆகிய பிரிவுகளைச் சரியாக வியாக்கியானம் செய்தே  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் முழுமையான நீதிபதிகள் குழாம் மூலம் இதனை விசாரிப்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும். உயர்நீதிமன்ற தீர்ப்புகளில்கூட இதற்கான முன்னுதாரணங்கள் காணப்படுகின்றன.

அனைவருக்கும் மேலாக மக்கள் இறையாண்மை காணப்படுவதோடு, அதற்கமையவே அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. எனவே, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இவ்வாறு மேற்கொள்ள முற்படும் திருத்தம் தொடர்பில் முறையான கலந்துரையாடலை நடத்தி, ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் அழிக்காதவாறு இச்செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு நபரின் அல்லது ஒரு சில குழுக்களின் நோக்கங்களை மையமாகக் கொண்டு இத்தகைய திருத்தங்களைச் செய்வது வெட்கக்கேடான செயலாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலை லொக்கில் தோட்டத்தில் புதிய மர...

2026-09-06 17:23:42
news-image

இலங்கை - இந்திய சுகாதார தொழில்நுட்ப...

2026-09-06 16:11:10
news-image

கஹத்துடுவையில் 123 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-09-06 16:10:42
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ...

2026-09-06 15:55:05
news-image

எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா...

2026-09-06 15:46:35
news-image

க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவு ;...

2026-09-06 15:39:18
news-image

மட்டக்களப்பு நகரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை...

2026-09-06 15:19:37
news-image

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின்...

2026-09-06 15:16:44
news-image

நாமல் ராஜபக்‌ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது...

2026-09-06 14:46:06
news-image

சட்டமா அதிபர் ஆலோசணையை விரைவுபடுத்த பொலிஸார்...

2026-09-06 14:31:15
news-image

கெப்பத்திகொல்லாவ பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

2026-09-06 14:11:42
news-image

வத்தளையில் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது

2026-09-06 13:40:19