மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027 உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் சிங்கப்பூர், ஹொங்கொங்

Published By: Vishnu

14 Aug, 2026 | 07:31 PM
image

(நெவில் அன்தனி)

ஹொங் கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ் அரினா உள்ளக அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பின் கிண்ணப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பயின் சிங்கப்பூரிடம் 54 - 82 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

சிங்கப்பூருக்கு எதிரான லீக் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை வீராங்கனைகள் எண்ணற்ற தவறுகளை இழைத்ததால் இலங்கை படுதோல்வி அடைந்தது.

லீக் சுற்றில் சிங்கப்பூரிடம் 51 - 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

அரை இறுதியில் மீண்டும் சிங்கப்பூரிடம் தோல்வி அடைந்ததால் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

இதேவேளை, மலேசியாவுடனான அரை இறுதியில் 51 - 47 என்ற கோல்கள் கணக்கில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய ஹொங்கொங், உலகக் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூருடன் ஆசியாவிலிருந்து விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இலங்கையும் மலேசியாவும் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடவுள்ளன.

ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியில் சிங்கப்பூரும் ஹொங்கொங்கும் நாளை விளையாடவுள்ளன.

இந்த முறை ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில் சகல அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியையாவது தழுவின.

சிங்கப்பூருடனான போட்டியில் வழமைபோல் இலங்கை வீராங்கனைகளிடையே சரியான புரிந்துணர்வு இல்லாததால் பந்து பரமாற்றங்களில் ஏகப்பட்ட தவறுகள் இழைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கோல் போடுவதில் இலங்கை வீராங்கனைகள் மூவர் கோட்டை விட்டனர். 14 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் சிங்கப்பூருக்கு 14 இரட்டை கோல் வாய்ப்புகளை இலங்கை தாரைவார்த்தது. இதன் காரணமாகவே இலங்கை 28 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அத்துடன் வீராங்கனைகளின் நிலைகளை மாற்றுவதில் இலங்கை பயிற்றுநர் பிரயோகித்த வியூகங்களும் பலன் தராமல் போயின.

இதேவேளை, சிங்கப்பூர் வீராங்கனைகள் தவறிழைத்த போதிலும் அவற்றை இலங்கை விராங்கனைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

இந்தப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியை சிங்கப்பூர் 20 - 11 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கியதுமே இலங்கை தோல்வி அடையும் என்பது உறுதியானது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கையினால் மீண்டு வர முடியாமல் போனது. அப் பகுதியையும் சிங்கப்பூர் 19 - 14 என தனதாக்கி இடைவேளையின்போது 39 - 25 என 14 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஆட்ட நேர பகுதியல் 24 - 15 எனவும் நான்காவது ஆட்ட நேர பகதியில் 19 - 14 எனவும் வெற்றிகொண்ட சிங்கப்பூர் ஒட்டுமொத்த நிலையில் 82 - 54 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58