அவசர சந்தர்ப்பங்கள், குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு அநீதிகளின் போது பொதுமக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்வதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் முக்கிய அவசர தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திடீர் விபத்துக்கள், குற்றச்செயல்கள், சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் தொடர்பான அவசர உதவிகளுக்கு 119 எனும் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவை தொடர்பு கொள்ள முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் உரிமைகள் மீறல் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்துத் தகவல்களை வழங்க அல்லது முறைப்பாடளிக்க 1929 எனும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், அநீதிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக 109 எனும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அவசர உதவி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உங்கள் பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் போதைப்பொருள் சார்ந்த ரகசியத் தகவல்களை பொலிஸாருக்கு வழங்குவதற்காக 1984 எனும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அல்லது போதைப்பொருள் தகவல் பிரிவின் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு, இந்த அவசர தொலைபேசி எண்களைத் தங்களின் தொலைபேசிகளில் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM