திருமண விழா முடிந்து திரும்பியபோது வெயங்கொடையில் வேன் விபத்துக்குள்ளாகி பாட்டியும் பேரனும் பலி!

14 Aug, 2026 | 05:41 PM
image

வெயங்கொடை, மங்களேகொட - நைவல வீதியில் வேன் ஒன்று வீதியோரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.

மூத்த சகோதரியின் திருமண விழா நிறைவடைந்த பின்னர், வெயங்கொடை- ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மணப்பெண்ணின் சகோதரரான 21 வயது இளைஞரே வேனைச் செலுத்திச் சென்றுள்ளதுடன், அதில் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளிட்ட 9 பேர் பயணித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி வேனைச் செலுத்திய சகோதரனும் அவரது பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த ஏனைய 7 பேரும் தொடர்ந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் 350...

2026-09-07 09:10:41
news-image

புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து...

2026-09-07 09:06:04
news-image

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 13 இலங்கையர்கள்...

2026-09-07 08:58:40
news-image

அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம்...

2026-09-06 16:07:20
news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12