நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால் சர்வசன வாக்கெடுப்பினை நடத்துங்கள் - ஜனாதிபதி அநுரவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

14 Aug, 2026 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து, நீதித்துறையைத் தமது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட முறையில் முயன்று வருகிறது. நீதித்துறையை அரசியலாக்க முயற்சிக்காமல், தைரியமிருந்தால் சர்வசன வாக்கெடுப்பினை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு எதிராக சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

இன்று நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த அரச அதிகாரத்தையும், நீதித்துறையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கங்கள் போன்றவை எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், உள்நாட்டில் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்த கருத்துக்கள் கூட அரசாங்கத்தால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தவாறு நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கோ, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கோ, எரிபொருள் விலைச் சூத்திரத்தை நீக்குவதற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, உலக நாடுகளுடன் மோதலை ஏற்படுத்தியாவது நீதித்துறையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தமக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதற்கே அலைமோதுகிறது.

நீதித்துறைச் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் திருடர்களைப் பிடிப்பதற்குமே இந்த 22 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாகக் கூறி அரசாங்கம் மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது. ஆனால், இந்த திருத்தத்தால் வழக்குகள் விரைவுபடுத்தப்படவோ அல்லது திருடர்கள் தண்டிக்கப்படவோ மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.

எதிர்க்கட்சியிலிருந்தபோது மக்களின் பக்கமிருந்து உரத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இன்று ஜனாதிபதியான பின்னர் அவர் முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுகிறார்.

ஜனாதிபதியிடம்  எந்தவொரு ஆபத்தான முடிவுகளையும் தானாக எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பதவியை இழக்க நேரிடும் என்ற பயத்தில் நீங்கள் முடிவெடுக்கத் தயங்கினால், அந்த முடிவை மக்களிடம் விட்டுவிடுங்கள். தைரியமிருந்தால் சர்வன வாக்கெடுப்பிற்கு சென்று மக்களின் தீர்ப்பைப் பெறுங்கள்.

உங்கள் பதவிக் காலம் முடிந்தாலும், இந்த 22 ஆவது திருத்தத்தினால் நாட்டின் அரசியலமைப்பும் நீதித்துறையும் சீரழிந்து நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்படும். எனவே, அரசியலமைப்பைச் சீரழிக்கும் இந்த முயற்சியை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10