வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படக் குழு!

Published By: Digital Desk 2

14 Aug, 2026 | 02:29 PM
image

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் 'ஐ அம் கேம்' எனும் திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் திட்டமிட்டபடி முழுமை அடையாத காரணத்தால் இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதியன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

துல்கர் சல்மானின் தயாரிப்பில் ஃபேண்டஸி திரில்லர் ஜேனரிலான ' ஐ அம் கேம்' திரைப்படத்தை நவாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார்.

கேரளாவில் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று இப்படம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த திரைப்படம் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், இந்திய திரைகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் திரையிடப்படுவதற்கு பொருத்தமாக படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்த நிலையில், ரசிகர்களுக்கு இந்த புதிய வெளியீட்டு திகதி சிறிய அளவில் ஏமாற்றத்தை அளித்தாலும், படம் ரசிகர்களால் கொண்டாடத்தக்கதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு குறையவில்லை.

துல்கர் சல்மான் , ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின்,  கயாடு லோஹர், கதிர்,  சம்யுக்தா விஸ்வநாதன், ஜிம்ஷி காலீத், ஜேக்ஸ் பிஜாய், ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'ஐ அம் கேம்' திரைப்படம், செப்டம்பர் மூன்றாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வியக்க வைக்கும் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51