ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு பணவனுப்பல் உயர்வடைந்தது

14 Aug, 2026 | 02:29 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் வெளிநாட்டு பணவனுப்பல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி வருவாயில்  புலம்பெயர் தொழிலாளர்களின் பணவனுப்பல் மிக முக்கியமானதொரு தூணாகும். வர்த்தகப் பற்றாக்குறையை சீர் செய்யவும், நாட்டின் கொடுப்பனவு நிலுவையை ஸ்திரப்படுத்தவும் இது உதவுகிறது. மத்திய வங்கியின் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் (ஜனவரி - ஜூலை) வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம்  5,382.4 மில்லியன்  டொலர் அதாவது சுமார் 5.38 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21.4 சதவீத வளர்ச்சியாகும். 

இலங்கையின் வெளிநாட்டுத் துறை ஸ்திரத்தன்மையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணவனுப்பல் மிக முக்கிய கருவியாக விளங்குகிறது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், உத்தியோகபூர்வ வங்கி அமைப்புகள் ஊடான பணப்பரிமாற்றம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போதைய மீட்புக் காலத்தில் உத்தியோகபூர்வ வழிகளினூடான வரவு கணிசமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

எனினும், கடந்த மே மாதத்தின் அதிகப்படியான வரவோடு ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இந்த வரவுகள் திடீர் சரிவைச் சந்தித்திருந்தன. மத்திய வங்கியின் அண்மைக்காலத் தரவுகளின்படி, ஜூன் மாதத்தின் வெளிநாட்டு பணவனுப்பல் போக்கு பின்னடைவை சந்தித்தது.

ஜூன் மாத வீழ்ச்சிக்கான காரணங்கள்

ஜூன் மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் திடீரெனக் குறைவடைந்தமைக்கு சில முக்கிய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதில் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் பதற்றங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளன. இலங்கையர்கள் அதிகம் பணிபுரியும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் பணவனுப்பலின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. 

இதற்கு அடுத்தப்படியாக பருவகால மாற்றங்களை குறிப்பிடலாம். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் உள்ளூர் பண்டிகைகளை (சிங்கள - தமிழ் புத்தாண்டு மற்றும் பெருநாட்கள்) முன்னிட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பணத்தை நாட்டுக்கு அனுப்புவார்கள். அதனைத் தொடர்ந்த வரும் மாதங்களில் இந்த வரவு இயல்பாகவே சற்று குறையும் போக்குக் காணப்படும்.

அதேபோன்று உள்நாட்டு மாற்று விகிதங்களின் ஸ்திரத்தன்மையும் செல்வாக்கு செலுத்துகின்றது. இலங்கை ரூபாவின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக ஓரளவு ஸ்திரமாக உள்ளதால், தொழிலாளர்கள் அதிக லாபத்தை எதிர்பார்த்து தங்களின் பணத்தை தற்காலிகமாகச் சேமித்து வைக்க முனையலாம்.

ஜூன் மாத வீழ்ச்சியால் ஏற்பட்ட தாக்கங்கள்

இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தற்போது  மெதுமெதுவாக மீண்டு வரும் சூழலில், இத்தகைய மாதாந்த வீழ்ச்சிகள் சில சவால்களைத் தோற்றுவித்தன. அதாவது இந்த வீழ்ச்சியானது வெளிநாட்டு இருப்பு மீதான அழுத்தத்தை தோற்றுவித்தது. சுற்றுலாத் துறை வருவாயும் ஜூன் மாதத்தில் சற்று மந்தமடைந்த நிலையில்  பணவனுப்பலின் வீழ்ச்சியும் சேரும்போது நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு வளர்ச்சியை இது தாமதமாக்கியது..

அடுத்ததாக உள்நாட்டு நுகர்வுச் சரிவை குறிப்பிடலாம். வெளிநாடுகளில் இருந்து பணத்தை நம்பியிருக்கும் நுகர்வோர் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைவடைவதால், உள்நாட்டுச் சந்தையில் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டு பணவனுப்பல்கள் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.  இவ்வாறு வெளிநாட்டு பணவனுப்பல் ஊடான வரவு அதிகரிப்பதற்கு சில முதன்மைப் பொருளாதாரக் காரணிகள் அடிப்படையாக அமைந்துள்ளன.

முறையான வங்கிப் பாதைகளுக்குத் திரும்புதல்

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய இணையான மாற்று விகிதக் கொள்கை  கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, 'உண்டியல்'  மற்றும் 'ஹவாலா'  போன்ற சட்டவிரோதப் பாதைகளிலிருந்து விலகி, தொழிலாளர்கள் முறையான வங்கி அமைப்புகளை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு  

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில்சார் (Professional) மற்றும் திறனுள்ள (Skilled) தொழிலாளர்கள் அதிகம் சென்றுள்ளனர். 

நம்பகமான மாற்று விகித ஸ்திரத்தன்மை

இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட ஒப்பீட்டளவு ஸ்திரத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக வங்கிப் பரிமாற்றங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

ஜூலை மாத பணவனுப்பல் உயர்வடைந்ததால் ஏற்பட்ட தாக்கம்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களின் அதிகரிப்பு மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பை  வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து, இறக்குமதிகளுக்கான செலுத்துகைச் சுமையைக் தணிக்கிறது. சந்தையில் டொலர் விநியோகம் அதிகரிப்பதால், இலங்கை ரூபாவின் மீதான அழுத்தங்கள் குறைந்து, நாணயம் வலுவடைவதற்கு அல்லது ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இது உறுதுணையாக அமைகிறது. கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கொள்வனவுச் சக்தி  அதிகரித்து, உள்நாட்டு நுகர்வுத் தேவையை உயர்த்துகிறது.

இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ள 5.38 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பணவனுப்பல்கள், இலங்கைப் பொருளாதாரம் மீண்டும் சுதாகரித்து வருவதற்கான தெளிவான சான்றாகும். எனினும், நீண்டகாலப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெளிநாட்டு பணவனுப்பலை மாத்திரம் சார்ந்திருக்காமல், ஏற்றுமதி வருவாய் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் இணையான வேகத்தில் கூட்டுவது அவசியமாகும் என துறைசார் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

துறைசார் ஆய்வளர்கள் முன்வைத்துள்ள யோசனைகள்

மாதாந்த வீழ்ச்சிகளைத் தடுக்கவும், முறையான வங்கி வழிகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம்  சில நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என துறைசார் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதாவது, டிஜிட்டல் பணவனுப்பல் செயலிகளை (உதாரணமாக: "Lanka Remit") தொழிலாளர்கள் மத்தியில் மேலும் பிரபல்யப்படுத்துதல், முறையான வழிகளில் பணம் அனுப்புவோருக்கு சிறிய அளவிலான வரிச் சலுகைகள் அல்லது காப்புறுதித் திட்டங்களை வழங்குதல், மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி, ஐரோப்பா மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளுக்கு (உயர் வருமானம் பெறும் துறைகளுக்கு) இலங்கைத் தொழிலாளர்களை அனுப்புவதை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணவனுப்பல்களை நீண்ட கால அடிப்படையில் நிலையாக அதிகரிப்பதற்கும், உத்தியோகபூர்வ வங்கி வழிகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார மற்றும் நிதித்துறை வல்லுநர்கள், சர்வதேச அமைப்புகள் (ILO, IPS, CBSL) பல்வேறு காத்திரமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

அந்தவகையில் உண்டியல் (Undial) மற்றும் ஹவாலா (Hawala) போன்ற சட்டவிரோத இணைச் சந்தை முறைகளை ஒடுக்கி, முறையான நிதிப் பரிமாற்றங்களை இலங்கை அதிகரிக்க வேண்டியுள்ளது. 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான விரிவான ஆய்வறிக்கையின்படி, புலம்பெயர் தொழிலாளர்கள் முறையற்ற வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரதான காரணம் வங்கி நடைமுறைகளின் சிக்கல்களும் அதிக பரிமாற்றக் கட்டணங்களுமே ஆகும். எனவே கையடக்க தொலைபேசி அடிப்படையிலான பணப்பரிமாற்றங்கள் மற்றும் உலகளாவிய நிதிநுட்ப நிறுவனங்களுடன் உள்ளூர் வங்கிகளை நேரடியாக இணைப்பது செலவைக் குறைக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி  ஏற்கனவே அறிமுகப்படுத்திய "Lanka Remit" தேசிய செயலியை மேலும் மேம்படுத்தி, உலகளாவிய பணப்பரிமாற்ற முகவர்களுடன் (MTOs) முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் பரிமாற்றக் கட்டணத்தை SDG (Sustainable Development Goal 10.c) 3% க்கும் குறைவாகக் கொண்டுவர முடியுமென பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனிநபர், நிறுவனங்களின் வருமான வரிச் சட்டங்களில்...

2026-09-03 13:30:40
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் விடயத்தில் இலங்கை...

2026-09-03 12:37:28
news-image

‘வெளிநாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கான 18...

2026-09-03 12:30:41
news-image

2027 முதல் இலங்கை கடன்களை மீள...

2026-09-03 12:31:13
news-image

சிறிய மருத்துவ நிலையம் ஒன்று இலங்கையின்...

2026-09-03 10:41:41
news-image

‘நீதிக்கான நீள் பயணம்’ முதலாவது சர்வதேச...

2026-09-02 17:37:59
news-image

செல்வம் பெருமையடிக்கும் இடமாக வழிபாடு மாறும்போது ...

2026-09-01 21:36:40
news-image

தகவல் அறியும் உரிமை ஆணையகம் :...

2026-09-01 19:03:44
news-image

இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழக்கூடியவர்கள்!...

2026-09-02 16:36:58
news-image

முட்டி மோதப்போகும் இரா­ஜ­தந்­தி­ரங்கள்

2026-08-30 17:24:20
news-image

அதிகரிக்கும் இராணுவமயமாக்கம்

2026-08-30 16:45:14
news-image

அடுத்த ஜனாதிபதி யார்?

2026-08-30 16:37:48