(செ.கவிஷனா)
மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை, இலங்கை சுதந்திரமான நாடு என்பதால் வெளிநாடுகள் இது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியுமே தவிர அழுத்தம் கொடுக்க முடியாது. அதேவேளை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இன்மையால் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
கன்னொருவையில் வெள்ளிக்கிழமை (14) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாட்டின் சாதாரண மக்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. மாறாக சட்டத்தரணிகள் நீதிபதிகள் மற்றும் சில தரப்பினருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும், இது மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆணையுடன் தொடர்புடைய விடயம் என்பதால் இதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
அத்துடன் மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணயப் பிரச்சினை இல்லாவிட்டால் தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு எவ்வித சிக்கலும் இல்லை.
இத்தகைய சிக்கல்களை விரைவாக தீர்த்து மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM