இன்றைய சூழலில் எம்மில் பலரும் காதல் குறித்த எண்ணங்களில் குழப்பம் இருப்பதால், எல்லா காதலும் திருமணத்தில் இணைவு பெற்று வாழ்க்கை முழுவதும் தொடர்வதில்லை.
இந்நிலையில் சிலர் மனதில் காதலை வைத்திருந்தாலும், அதனை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக, திருமண விடயத்தில் பெற்றோர்களின் வழிகாட்டலை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்ற வரனை தெரிவு செய்வதற்காக முயற்சிக்கும் போது அதில் தொடர் தாமதங்களும், தடைகளும் ஏற்பட்டால் மனதில் அச்சம் இயல்பாக ஏற்பட தொடங்கும்.
இந்நிலையில் பிள்ளையின் ஜாதகத்தை சோதிடர்களிடம் காண்பித்தால், அவர்கள் செவ்வாய் தோஷம் இருப்பதன் காரணமாக விரும்பிய வரன் கிடைக்காமல் தாமதம் ஆகிறது என துல்லியமாக அவதானித்து, அதற்கான சில பரிகாரங்களையும் அவர் முன்மொழிவர்.
அதனை மேற்கொண்ட பிறகும் திருமணம் சார்ந்த முயற்சியில் தொடர் தாமதங்கள் ஏற்பட்டால், அதனை எளிதாக எதிர்கொள்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு எளிய வழிமுறையை பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள்
- பால்
- குங்குமம்
- தண்ணீர்
- செவ்வரளி பூமாலை
- மல்லிகை பூ மாலை
- சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண வஸ்திரம்.
உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த நட்சத்திர நாளன்று உங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று, பால் மற்றும் குங்குமம் கலந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து, செவ்வரளி பூ மற்றும் மல்லிகை பூவால் தொடுக்கப்பட்ட மாலையை சாற்றி, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண வஸ்திரத்தை அணிவித்து, மனமுருக 'செவ்வாய் தோஷம் நீங்கி, எம்முடைய பிள்ளைக்கு அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமைய வேண்டும்' என பிரார்த்தனை செய்தால் 48 நாட்களுக்குள் சாதகமான சூழல் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் உங்களுக்கும் அல்லது உங்களுடைய பிள்ளைகளுக்கும் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் இருந்தால், அவர்களை ஒரு முறை உங்கள் இல்லத்திற்கு வரவழைத்து அவர்கள் விரும்பிய உணவை பசியாற செய்து, அவர்கள் விரும்பும் ஆடைகளை பரிசாக வழங்கி, அவரை மனம் குளிர வைத்தால் செவ்வாய் பகவானின் வீரியம் குறைய தொடங்குவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM